Tuesday, December 14, 2010

நீர்கொழும்பு அல்பலாஹ் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹானுக்கு மரண அச்சுறுத்தல்

நீர்கொழும்பு அல்பலாஹ் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹானுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும்,பிரதி அதிபரை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரியும் மகஜர்களில் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சில நபர்களால் கடிதம் மூலமாக தனக்கு விடுக்கப்பட்டுள்ள விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாகவும், இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரி சிலரால் பெறப்பட்டுள்ள மகஜர் தொடர்பாகவும் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.அத்துடன் நீர்கொழும்பு வலய கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

அதிபர் சேவை வகுப்பு 2-11 ற்கான எழுத்துப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்று (நீர்கொழும்பு வலயத்தில் முதலிடம்) சித்திடைந்துள்ள இவர், முன்னாள் ஆசிரிய ஆலோசகரும் கவிஞரும் பிரபல ஊடகவியலாளருமாவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் மூன்று வருடகாலம் நிகழ்சித் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார். அத்துடன் புத்தகங்கள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார்

அல்பலாஹ் மகாவித்தியாலயத்தில் இவர் பிரதி அதிபராக கடமையை பொறுப்பேற்றது முதல் நிருவாக ரீதியிலும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையிலும்,பாடசாலையை ஊடகங்கள் வாயிலாக பிரபல்யப் படுத்துவதிலும் தனது முழுப்பங்களிப்பையும் வழங்கி பாடசாலையை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றமையை பொறுக்காத சிலரே,இவர் சார்ந்த இஸ்லாமிய ஜமாத் பிரிவை முன்னிலைப்படுத்தி இவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் இடமாற்றலாகி செல்லுமாறு வற்புறுத்தியும்,மகஜர்களில் கையொப்பமும் பெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.பாடசாலையின் பெயரில் alfalahmv.blogspot.com என்றபெயரில் ஜனாப் ஷாஜஹான் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்மையும் மாணவர்களின் ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவர மாணவர்களை உற்சாகப்படுத்துயுள்மையும் கடந்த சில மாத காலத்தில் நிகழ்ந்தவையாகும்

இப்பாடசாலையில் கடந்த ஒன்பது வருட காலப் பகுதியில் ஆறு அதிபர்கள் பல்வேறு அழுத்தங்களின் காரணமாக இடமாற்றலாகியும்,இடமாற்றல் செய்யப்பட்டும் பொறுப்பிலிருந்து விலகியும் உள்ளனர்.இவர்களில் ஒருவர் கல்வி நிருவாக சேவை அதிகாரியாவார். மூவர் அதிபர் சேவையை சேர்ந்தவர்களாவர்.இருவர் ஆசிரியர் சேவையை சேர்ந்தவர்களாவர்.இவர்களில் எவரும் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹான் பின்பற்றும் இஸ்லாமிய ஜமாத்தை சேராதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,10-12-2010 அன்று போருதொட்ட ஜும்மா பள்ளிவாசல்களில் பிரதி அதிபரை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரி மகஜர்களில் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளதன் பின்னணியில் பெரியமுல்லை பிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இருவர் இருப்பதாகவும் இவ்விவகாரத்தை அவர்கள் தமது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்துவதாகவும் பிரதேசமக்கள் குறிப்பிடுகின்றனர்.

மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள கடிதத்தின் பின்னணியில்பாடசாலையின் ஆசிரியர்கள் சிலரும் பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிலரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலரும் இருப்பதாகவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை,பாடசாலையைவிட்டு இடமாற்றலாகிச் செல்ல வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் பிரதி அதிபர் ஷாஜஹானுக்கு நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை விடுத்து வருவதுடன் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

.

Friday, May 28, 2010


ஆங்சான் சூகி உட்பட சகல அரசியல் கைதிளையும் விடுலை செய்!

மியன்மார் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

மியன்மாரின் எதிர் கட்சித் தலைவி ஆங்சான் சூகி உட்பட சகல அரசியல் கைதிளையும் விடுலை செய்யுமாறு வற்புறுத்தி கொழும்பு-7 இல் அமைந்துள்ள மியன்மார் தூதரகம் முன்பாக 26-5-2010 அன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனை இரன்டாம் உலக நண்பாகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஐக்கிய சோஷலிச கட்சித் தலைவர் சிறிதுங்க ஐயசூறிய ,மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள ,ஊடகவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மியன்மாரில் தேர்தல் நடைபெற்று 20 வருடங்கள் நிறைவடைவதையிட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது

To release aung san suki and political jailers, ” friends of 2nd world” organization has prepared a picketing and it has held forward the Burma embassy at Colombo-7 on 26 may 2010.


Saturday, May 1, 2010

நீர்கொழும்பு கட்டுவையில் முச்சக்கர வண்டி மீது ரயில்​ மோதியதில்இருவர் பலி






நீர்கொழும்பு கட்டுவையில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற முச்சக்கர வண்டி மீது ரயில்​ மோதியதில் இளம்பெண் ஒருவர் (29 வயது) சம்பவ இடத்தில் மரணமானதுடன் முச்சக்கர வண்டி சாரதி குருணாகல் வைத்திய சாலையில் பின்னர் மரணமானார். இச் சம்பவம் 30-4-2010 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

வடபகுதியை சேர்ந்த இளம் பெண்ணே சம்பவத்தில் மரணமானவராவார் இவர் திருமணம் முடித்து 9 மாதமே ஆவதாகவும் நீர்கொழும்பு கட்டுவையில் கணவர் மற்றும் அம்மாவுடன் வசித்துவருவதாகவும், அம்மாவுடன் முச்சக்கர வண்டியில் செல்லும்பதே விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.

சம்பவத்தில் இறந்த முச்சக்கர வண்டி சாரதி தளுபத்தை பிதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.விபத்து சம்பவத்தைதொடர்ந்து பிதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆயத்தமாயினர். பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தினர்.

இந்த பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் பலர் மரணமாகியுள்மை குறிப்பிடத்தக்கது.

Sunday, April 11, 2010

பாராளுமன்றத்திற்கு நீர்கொழும்பு தேர்தல் தொகுதியிலிருந்து இருவர் தெரிவு



இலங்கையில் நடந்து முடிந்த ஏழாவது பாராளுமன்ற தேர்தலில்(8-4-2010) நீர்கொழுபு தேர்தல் தொகுதியிலிருந்து போட்டியிட்ட இருவேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.அத்துடன் நீரகொழும்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2089மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 26076 வாக்குகளும் ஐக்கிய தேசிய முன்னணி 23987 வாக்குகளும்,ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 3463 வாக்குகளும் பெற்றுள்ளன.

நீர்கொழுபு தேர்தல்தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன 46040 விருப்பு வாக்குகளும் , ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஜயலத் ஜயவர்தன 58302 விருப்பு வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் 23122 விருப்பு வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
இதேவேளை,கட்டனை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட விஷேட வைத்திய நிபுணர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே 186140 விருப்பு வாக்குகள் பெற்று கம்பஹா மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Monday, April 5, 2010

மக்கள் மறுமலர்ச்சி முன்னணி நீர்கொழும்பில் நடத்திய பிரசாரக் கூட்டம்





ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் யாழ் மாவட்ட பொது தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அசோக், உதயன் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் மறுமலர்ச்சி முன்னணி 4-4-2010 அன்று நீர்கொழும்பு பெரிய முல்லையில் பிரசாரக் கூட்மொன்றை நடத்தியது. மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் கம்பஹா மாவட்ட தலைவர் எம்.எம்.சபூர் தலைமையில் நடத்தப்பட்ட இந் நிகழ்வில் மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் உப தலைவர் மௌலவி சுபியான் உட்பட பல முக்கியஸ்த்தர்கள் உரையாற்றினார்கள்.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களுக்காக இப்பிரசாரக் கூட்டம் நடத்தப்பட்டது.

கொச்சிக்டை -இராஜ மாதங்கி அம்பாள் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு நிகழ்வு

40 இலட்சம் ரூபா உத்தேச செலவில் அமைக்கப்படவுள்ள நீர்கொழும்பு –கொச்சிக்டை-மாஹிம்வீதியில் அமைந்துள்ள இராஜ மாதங்கி அம்பாள் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு நிகழ்வு 27-3-2010 அன்று இடம் பெற்றது.இந் நிகழ்வில் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன, மேயர் ஹேர்மன் குரேரா,மாநகர சபை உறுப்பினர்களான சகாவுல்லாஹ்,சுனில் சில்வா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, March 13, 2010

ஐதே.க.வின் நீர்கொழும்பு தேர்தல்தொகுதி செயற் பாட்டாளர்களுக்கான கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் செயற் பாட்டாளர்களுக்கான கூட்டம் 13-3-2010 அன்று நீர்கொழும்பு முன்னக்கர , அலியபொல நகரபை மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஐதே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க,பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான டாக்டர் ஜயலத் ஜயவர்தன,ஜோன் அமரதுங்க, சாபி ரஹீம்,சட்டத்தரணி ரோஸ் பெர்னாண்டோ, சி. விக்ணேஸ்வரம் (ஜெரம்).மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் கட்சியின் பிதேச முக்கியஸ்த்தாகள் பலர் கலந்துகொண்டனர்.அதன்போது எடுக்கப்பட்ட காட்சிகள் சில





Monday, March 1, 2010

புளொக் சம்பந்தமான இரு நாள் பயிற்சிசெயலமர்வு
புளொக் (Workshop on community web blog and podcasting training for young environmentalists) சம்பந்தமான இரு நாள் பயிற்சிசெயலமர்வு 27,28பெப்ரவரி 2010 அன்று நீர்கொழும்பு, கம்மல்தொட்ட இதிவர கடற்றொழில் வங்கி மற்றும் பிரஜாசாலா மண்டபத்தில் நடைபெற்றது.
SriLanka Water partnership , lanka jalani, cap-Net Lanka, Netwater ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.அதன்போது எடுக்கப்பட்டகாட்சி வீடியோ கிளிப்பாக

Thursday, February 25, 2010

நீர்கொழும்பு நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரி பாலர் விளையாட்டுப் போட்டி-2010

நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரியின் பாலர் பிரிவு மாணவிகளின் இல்ல விளையாட்டுப் போட்டி 25-2-2010 அன்று பாடசாலை அதிபரின் தலைமையில்பிற்பகல் ஒரு மணிக்கு காமச்சோடை சென். மேரிஸ் மைதானத்தில்நடைபெற்றது. நிகழ்விற்கு நீர்கொழும்பு மேயர் ஹேர்மன் குரேரா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்

Sunday, February 14, 2010

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து கொழும்பில் நடந்த சத்தியாகிரகப் போராட்டம்

எதிரணிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல்சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யக் கோரியும் எதிர் கட்சிகளின் கூட்டணி 10-20-2010 அன்று கொழும்பு ஹல்ஸ்டாப் நீதி மன்ற வளவில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தியது.
இதன்போது அங்கு திரண்ட குழுவினர் எதிர் கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது போத்தல்கள் கற்கள் மற்றும் பொல்லுகளை வீசி எறிந்து தாக்குதலை
மேற்கொண்டனர். இதற்கு எதிர் கட்சிகளின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்தபோது அக் குழுவினர் ஓடினர்.ஏற்பட்ட நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பொலிஸார் கண்ணீர் புகைகுண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சியும் அடித்தனர்.இச் சம்பவத்தின் போது இரு பொலிஸார் உட்பட
அறுவர் காயடைந்தனர்.







Monday, February 8, 2010

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணி

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 6-2-2010 அன்று நீர்கொழும்பில் கூட்டமும் ஆர்ப்பாட்டப் பேரணியும் துண்டுப்பிரசுர விநியோகமும் இடம் பெற்றது.எதிர்கட்சியினரும் சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பினரும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்,அதன் காட்சிகள் வருமாறு.

Monday, February 1, 2010

நீர் பறவைகள் - Water Birds


இலங்கை (கொழும்பு) மிருகக் காட்சி சாலையில் (ZOO) வாழும் நீர் பறவைகள் மாலை நேரத்தில் ஒன்று கூடி உணவு (மீன்கள்) வழங்கும் வண்டி வரும் வரை காத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. உணவு வழங்கும் வண்டியின் ஓசை கேட்டவுடன் அவைகள் பறந்தோடி வந்து உணவை அழகாக உண்கின்றன.இக்காட்சியை அனைவரும் பார்த்து வியக்கின்றனர்.அந்த வீடியோ காட்சிஇது.



Saturday, January 30, 2010

அனோமா பொன்சேகாவின் பிறந்தநாள்

ஆறாவது நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா 12-1-2010 அன்று நீரகொழும்பு வருகை தந்து பெண்கள் அமைப்பினைரை​ சந்தித்தார். இந்நிகழ்வு கியூபிட் கார்ட்ன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பாரியார் ஸானாஸ் ஹக்கீமும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். இந்நிகழ்வின் போது அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் அனோமா பொன்சேகாவுக்காக "கேக் "ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனோமா பொன்சேகா "கேக்"வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோகாட்சி இது.

Thursday, January 28, 2010

இலங்கையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல்
இலங்கையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் 26-1-2010 அன்று நடைபெற்றது.இத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கும் எதிரணிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல்சரத் பொன்சேகாவுக்குமிடையில் கடும்போட்டி நிலவியது.
27-1-2010 அன்று மாலை தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி 60 இலட்சத்து15 ஆயிரத்து 934 வாக்குகள் (6,015,934) பெற்று 57.88சதவீத) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வெற்றிபெற்றார். எதிரணிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல்சரத் பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகள் (4,173,185) பெற்று (40.15 வீதம்) இரண்டாமிடம் பெற்றார்.
இத்தேர்தலில் 18,42,749 மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் மக்களின் கருத்துக்களுக்கும் அவர்களின் விருப்பங்களுக்கும் உட்பபட்டதாக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல்சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரங்கள் பல நீர்கொழும்பிலும் இடம்பெற்றன. அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் ​இங்கு தரப்பட்டுள்ளன.

ஜெனரல் சாத் பொன்சோகாவின் பிரசாரக் கூட்டம்-கடோல்கலே மைதானம்


கலாநிதி விக்ரமபாகு கருனாரத்தினவின் கூட்டம்


திருமதி அனோமா பொன்சேகா பெண்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வில்-உடன் இருப்பதுதிருமதி ஸானாஸ் ஹக்கீம்

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்