Saturday, July 30, 2011

நீர்கொழும்பு டொன் பொஸ்கோ தொழில் நுட்ப நிலையம் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட நிகழ்வில் பிரதமர் பிரதம அதிதி



நீர்கொழும்பு டொன் பொஸ்கோ தொழில் நுட்ப நிலையம் தொழில் நுட்ப கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட நிகழ்வும் பரிசளிப்பு மற்றும் பயிற்சிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 24-7-2011 அன்று இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதமர் தி.மு.ஜயரத்ன பிரதம அதிதயாக கலந்து சிறப்பித்தார்.பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

Sunday, July 3, 2011


பொலிசாரிடமிருந்து தப்பித்துக்கொள்ள கடலில் பாய்ந்த

இளைஞன் பலி

போதைப் பொருள் விற்பனை தொடர்பாக பொலிசார் கைது செய்ய வந்த போது, பொலிசாரின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீர்கொழும்பு காமச்சோடை கடலில் பாய்ந்த 26 வயது இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கி மரணமாகியுள்ளார்.

இச் சம்பவம் 1-7-2011 அன்று முற்பகல் இடம் பெற்றுள்ளது. இளைஞனின் சடலம் அடுத்த நாள் (2-7-2011) காலை கொச்சிக்கடை பலகத்துறை கடல் பகுதியில் கரை ஒதுங்கியது.

காமச்சோடை, விஸ்த்திரின் வீதியை சேர்ந்த தினேஷ் என்பவரே சம்பவத்தில் மரணமானவராவார்.சம்பவ இடத்திற்கு சென்ற நீர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ். வீரதுங்க விசாணை நடத்தினார்.


மக்கள் வங்கியின் பொன் விழாவையிட்டு கொச்சிக்கடை கிளையில் விஷேட நிகழ்வுகள்

இலங்கை மக்கள் வங்கியின் பொன் விழாவையிட்டு 1-7-2011 அன்று நீர்கொழும்பு கொச்சிக்கடை மக்கள் வங்கிக் கிளையில் விஷேட நிகழ்வுகள் இடம் பெற்றன. நிகழ்வின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் சில