Tuesday, June 21, 2011


பஸ்ஸினுள் விழுந்து மயக்கடைந்த மாணவி மரணம்

பாடசாலை முடிவடைந்து தனியார் பஸ்ஸில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி ஒருவர், பஸ் சாரதி திடீரென்று பிரேக் அடித்த்தன் காரணமாக பஸ்ஸினுள் விழுந்து மயக்கடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமாகியுள்ளார்.

இச்சம்பவம் 20-6-2011 அன்று நீர்கொழும்பு கல்கத்தை சந்தியில் பிற்பகல் 1.40 மணியளவில் இடம் பெற்றுள்ளது.நீர்கொழும்பு குரணை சாந்த ஹானா மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கற்கும் மெத்சலா நத்தாலி பீரிஸ் (17 வயது) என்ற மாணவியே சம்பவத்தில் பலியானவராவார்.இவர் கட்டானை, கந்தவல பிதேசத்தை சேர்ந்வராவார்.இவர் சிறிய வயதிலிருந்தே இருத நோயால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வருகிறது.

Thursday, June 16, 2011

நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்பகுதியில் சிறுவன் உட்பட இருவர் மரணம்

நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்பகுதியில் நண்பர்களுடன் பந்து விளையாடச் சென்ற சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி மரணமாகியுள்ளான் .இச் சம்பவம் 15-6-2011 அன்று இடம்பெற்றது.

முஹம்மத் சுஹ்ரி என்ற 14 வயது சிறுவனே சம்பவத்தில் பலியானவனாவார்.இவர் நீர்கொழும்பு தளுபத்தை தெனியாவத்தை பிரதேசத்தை சேர்ந்தவராவார். நீர்கொழும்பு, அல்ஹிலால் கல்லூரியின் மாணவராவார். சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களின் பின்னரே (16-6-2011 அன்று) போருதொட்ட இறால் வாடி அருகில் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஜனாஸா நல்லடக்கம் 16-6-2011 அன்று மாலை 3 மணிக்கு பெரியமுல்லை முஸ்லிம் மையவாடியில் இடம் பெற்றது.

இதேவேளை, இறால் வாடி அருகில் 14-6-2011 அன்று 24 வயது குடும்பஸ்த்தர் ஒருவர் கடலில் மூழ்கி மரணடைந்துள்ளார்.

Saturday, June 11, 2011


நீர்கொழும்பில் ஒருவர் வாளினால் வெட்டி கொலை

மாநகர சபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

கொலை செய்யப்பட்டவர் மனைவி



நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்தில் 42 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் ஒருவர் வாளினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் வலது கால் வெட்டப்பட்டு அதிகம் இரத்தம் வெளியேரியதன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

இச் சம்பவம் நேற்று (11) இரவு 7 மணியளவில் இடம் பெற்’றுள்ளது.10 பேரை கொண்ட குழுவினர் இச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினரான மார்க் சுஜித் என்பவரே தனது கணவனை வாளினால் வெட்டியதாகவும் கொலை செய்யப்பட்டவரின் மனைவி பொலிசாரிடம் வாக்கு மூலமளித்துள்ளார்.

இச் சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்டவரின் சகோதரருக்கு சொந்தமானதும் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளjதுமான தங்கு விடுதி ஒன்று (restaurant) குற்றம் சாட்டப்பட்டுள்ள குழுவினரால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைளை மேற் கொண்டுள்ளனர்.

Saturday, June 4, 2011


சுதந்திர வர்த்தக வலய ஊழியர் ரொசேன் சானகவின் இறுதிச் சடங்கு

தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மரணமான சுதந்திர வர்த்தக வலய ஊழியர் ரொசேன் சானகவின் (22வயது) இறுதிச் சடங்கு நேற்று சனிக்கிமை மாலை4 மணியளவில் கல்லொழுவை ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்று, தேவாலயம் அருகில் உள்ள மயானத்தில் தேகம் தகனம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் தொழிற்சாலை ஊழியர்கள் ,பொது மக்கள் தொழிற் சங்கத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.






Thursday, June 2, 2011

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஊழியர் ஒருவர் மரணமானதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஊழியர் ஒருவர் மரணமானதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க 18 ஆம் கட்டை பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்த்தில் பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு சிவில் அமைப்புக்கள் கலந்துகொண்டன.







Wednesday, June 1, 2011


வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்ளை பாரவையிட்டஅரசியல் கட்சித் தலைவர்கள்

தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களை 31-5-2011 ஆம் திகதியும் இன்றும் ( 1-6-2011 ) அரசியல் கட்சி தலைர்கள் பலர் வைத்தியசாலைக்கு சென்று பாரவையிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி ,ஜே.வி.பி. தலைவர்களே இவ்வாறு பார்வையிட்டவர்களாவர்.







கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 250

பேர் வைத்தியசாலையில்





தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30-5-2011 அன்று பிற்பகல் 1 மணிமுதல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்குமிடையில் மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்ளை களைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகையை பயன்படுத்தினர். 250ஊழியர்கள் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.18 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.