Thursday, December 10, 2009
சர்வதேச மனித உரிமை தினத்தையிட்டு 10-12-2009 அன்று கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் கூட்டமும்இ கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது.இதனை சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பு மற்றும் சிவில் அமைப்புக்கள் சில இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.மனித உரிமையை பாதுகாக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வோம் என்ற தொனிப் பொருளில் சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. லிப்டன் சுற்று வட்டத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாயர் திஸ்ஸ நாயகம் உட்பட சகல அரசியல் கைதிகயையூம் விடுதலை செய்யூமாறு வலியூறுத்தப்பட்டது.


Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment