Sunday, November 22, 2009

அமைச்சர் ஜெயராஜ் குண்டுத் தாக்குதலில் மரணம்
கம்பஹா,வெளிவேரியவில் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி இடம் பெற்ற குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை செய்ப்பட்டார்.
சிங்கள,தமிழ் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வொன்றை ஆரம்பித்து வைப்பதற்காக சென்றிருந்த போதே இனந்தெரியாத குண்டுதாரியின் தாக்குதலுக்கு அமைச்சர் இலக்கானார். இதன்போது மேலும் பலர் அங்கு இறந்தனர்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோவின் பூதவுடல் 7-4-2008 மாலை முதல் நீர்கொழும்பு ,கட்டானை,வெலியேனயில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், கலைஞர்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள் , அரச,காரியாலய ஊழியர்கள், பொதுமக்கள், ஆதரவாலர்கள் என பல்வேறு தரப்பினரும் அமைச்சரின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
10-4-2008 அன்று வெலியேனயில் உள்ள ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே விளையாட்டு மைதானத்தில் இறுதிச் சடங்கு பிற்பகல் 3 மணிக்கு முழு அரச மரியாதையுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் ரத்னசறி விக்ரமநாயக்க ,அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, டக்ளஸ் தேவானந்தா, பேரியல் அஷ்ரப், பீலிக்ஸ் பெரேரா, அனுர பிரியதர்சன் யாப்பா,கரு ஜயசூரிய, ஏ.எச்.எம்.பௌஸி,ராஜித சேனாரத்ன உட்பட மேலும் பல அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள், உறுப்பினர்கள், மேல் மாகாண ஆளுனர்,மேல் மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட்குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா,பஷில் ராஜபக்க்ஷ, ரெஜிரணதுங்க, ஜனாதிபதியின் ஊடக ஆலாட்சி அதிகாரி ஏ.எச்.எம். அஸ்வர்,ஹெல உறுமய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண,மாநகர சபை உறுப்பினர்கள்,சர்வமதத் தலைவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
அங்கு அஞ்சலி உரைகள் பல இடம்பெற்றன.தொடர்ந்து மாலை 5 மணியளவில் பூதவுடல் வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திற்கு எடுத் செல்லப்பட்டு அங்கு விஷேட ஆராதணைகள் இடம் பெற்றன.. பின்னர் மாலை 6 மணியளவில் வெலிஹேன ரோமன் கத்தோலிக்க சேமக்காலையில் அமைச்சரின் தேகம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பூதவுடல் கொண்டு செல்லப்பட்ட வீதிகளின் இரு மருங்கிகளிலும் கூடி நின்ற மக்கள் அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது.




No comments:

Post a Comment