Thursday, November 19, 2009

மரணங்கள் மலிந்த தேசம்

எமது தேசம் மரணங்கள் மலிந்த தேசமாக ஆகிவிட்டது. மனித உயிர்களின் மதிப்பு தேய்பிறையாக தேய்ந்து கொண்டிருக்கும் போது விலைவாசி எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுக்கொண்டு இருக்கிறது.
இங்கு பல மனிதர்கள் மனித நேயத்தை‚ மனிதாபிமானத்தை மறந்து மிருகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நீர்கொழும்பு வெலிஹேன பிரதேசத்தில் 6-9-2007 நடந்த சம்பவம் ஒன்று மனிதன் மிருகமாக வாழ்ந்து கொண்டிருப்
பதற்கு சிறந்த உதாரணமாகும்.அந்தச் சம்பவம் என்ன?
தனது ஆசை நாயகியை கொலைசெய்து ஒருவருக்கும் தெரியாமல் வீட்டின் பின்னால் குழி தோண்டி புதைத்து வைத்த பாதகன் ஒருவன் அகப்பட்டுக் கொள்கிறான். பெண்ணின் சடலம்
புதைக்கப்பட்டு 5 தினங்களின் பின்னர் பொலிஸாரால் மீட்கப்படுகிறது.

இக்கோரச் சம்பவம் நீர்க்கொழும்பு வெலிஹேன
கிராமத்தின் அடிக்கண்டிய என்ற இடத்தில் இடம்பெற்றது. தனது முதல் மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு ஆசை
நாயகியுடன் வாழ்ந்துகொண்டிருந்த கொலைக்குற்றம் புரிந்த சந்தேக நபரான வனசிங்க ஆராய்ச்சிகே மனுவல் பிரான்ஸிஸ் (வயது-48) என்பவர்‚ பின்னர் ஆசை நாயகியான மஹாமாலிகே
கிரிஸ்டின் சியாமளியையும் (வயது-42) வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து ஆசை நாயகியின் மகள் ஒருவருடனும் தொடர்பு வைத்துக்கொள்கிறார்.
பின்னர் அந்த இளம் பெண்ணும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக தொழில்புரிய செல்கிறார்.

சந்தேகநபர் இவ்வாறு வாழ்ந்துவரும் வேளையில் முதல் மனைவி சுகயீனம் காரணமாக வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புகிறார். சிறிது நாட்களின் பின்னர் 1-09-2007 அன்று ஆசை நாயகியும் நாடு திரும்புகிறார்.

ஆசை நாயகியின் வரவைத் தொடர்ந்து முதல் மனைவி தனது மகனின் வீட்டுக்குச் சென்று வசிக்கிறார்.
இந்த நிலையில்‚ சந்தேகநபர் 6-09-2007 அன்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆசை நாயகியை கத்தியால் வெட்டிக் கொலைசெய்துவிட்டு வீட்டின் பின்னால் பெரிய குழி ஒன்றை தோண்டி புதைத்துவிட்டு‚ அதன் மீது வாழை மரம் ஒன்றையும் நாட்டி வை
க்கிறார்.
பின்னர் ஒன்றும் நடக்காததுபோல் இருந்துவிடுகிறார்.
அந்த பாதகனுக்கு தான் செய்த கொலை பற்றி வெளியில் தெரியவராது என்ற நம்பிக்கை.நீர்க்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதோடு‚ அடுத்த நாள் (11-09-2007) சடலமும் மீட்கப்படுகிறது.
ஆசை நாயகி வெளிநாட்டில் வைத்து வேறு ஒருவருடன் தொடர்புகொண்டு‚ அவருடன் இலங்கை வந்ததை அறிந்தே தாம் அவரை கொலைசெய்தார் என சந்தேக நபர் பொலிஸாரிடம்
தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் முதல் மனைவிக்கு நான்கு பிள்ளைகளும்‚ ஆசை நாயகிக்கு அவரின் முதல் கணவர் மூலம் மூன்று பிள்ளைகளும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.சுடலம் மீட்கப்பட்டபோது சடலத்தின் முகம் இனங்காண முடியாதவாறு சேதமடைந்து காணப்பட்டது. வெலிஹேன‚ அடிக்கண்டிய பிரதேசம் அன்று முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.மனித உயிர் இவ்வளவு மலிவானதா?



இது மரணங்கள் மலிந்த தேசமா?

No comments:

Post a Comment