நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு பதில் அமைச்சர் விஜயம்
நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு பதில் அமைச்சர் வி. புத்திரசிகாமணி 2-5-2009 அன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
அமைச்சருடன் அதிகாரிகளும் அச்சு இலத்திரனியல் ஊடகவியலாளர்களும் உடன் சென்றிருந்தனர். இத் திடீர் விஜயத்தின் போது, அமைச்சர் வி. புத்திரசிகாமணி கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கூடங்கள், சிறைச்சாலை வைத்தியசாலை, சமையலறை பகுதி, குளியலறை பகுதி உட்பட சிறைச்சாலையின் பல்வேறு கூடங்களையும் பார்வையிட்டதுடன் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு உரிய பணிப்புரைகளை வழங்கினார்.
சிறைச்சாலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர், கைதிகளுடளுடன் உரையாடி அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
Sunday, November 29, 2009
Sunday, November 22, 2009
அமைச்சர் ஜெயராஜ் குண்டுத் தாக்குதலில் மரணம்
கம்பஹா,வெளிவேரியவில் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி இடம் பெற்ற குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை செய்ப்பட்டார்.
சிங்கள,தமிழ் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வொன்றை ஆரம்பித்து வைப்பதற்காக சென்றிருந்த போதே இனந்தெரியாத குண்டுதாரியின் தாக்குதலுக்கு அமைச்சர் இலக்கானார். இதன்போது மேலும் பலர் அங்கு இறந்தனர்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோவின் பூதவுடல் 7-4-2008 மாலை முதல் நீர்கொழும்பு ,கட்டானை,வெலியேனயில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், கலைஞர்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள் , அரச,காரியாலய ஊழியர்கள், பொதுமக்கள், ஆதரவாலர்கள் என பல்வேறு தரப்பினரும் அமைச்சரின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
10-4-2008 அன்று வெலியேனயில் உள்ள ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே விளையாட்டு மைதானத்தில் இறுதிச் சடங்கு பிற்பகல் 3 மணிக்கு முழு அரச மரியாதையுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் ரத்னசறி விக்ரமநாயக்க ,அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, டக்ளஸ் தேவானந்தா, பேரியல் அஷ்ரப், பீலிக்ஸ் பெரேரா, அனுர பிரியதர்சன் யாப்பா,கரு ஜயசூரிய, ஏ.எச்.எம்.பௌஸி,ராஜித சேனாரத்ன உட்பட மேலும் பல அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள், உறுப்பினர்கள், மேல் மாகாண ஆளுனர்,மேல் மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட்குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா,பஷில் ராஜபக்க்ஷ, ரெஜிரணதுங்க, ஜனாதிபதியின் ஊடக ஆலாட்சி அதிகாரி ஏ.எச்.எம். அஸ்வர்,ஹெல உறுமய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண,மாநகர சபை உறுப்பினர்கள்,சர்வமதத் தலைவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
அங்கு அஞ்சலி உரைகள் பல இடம்பெற்றன.தொடர்ந்து மாலை 5 மணியளவில் பூதவுடல் வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திற்கு எடுத் செல்லப்பட்டு அங்கு விஷேட ஆராதணைகள் இடம் பெற்றன.. பின்னர் மாலை 6 மணியளவில் வெலிஹேன ரோமன் கத்தோலிக்க சேமக்காலையில் அமைச்சரின் தேகம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பூதவுடல் கொண்டு செல்லப்பட்ட வீதிகளின் இரு மருங்கிகளிலும் கூடி நின்ற மக்கள் அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது.

Saturday, November 21, 2009
கிளேமோர் தாக்குதலில் தேசத்தை கட்டி எழுப்பும் அமைச்சர் தசநாயக்க பலியானார்.
கிளேமோர் தாக்குதலில் தேசத்தை கட்டி எழுப்பும் அமைச்சர் தசநாயக்க பலியானார்.நீர்கொழும்பு- கொழும்பு பிரதான வீதியில் ஜாஎல ருக்மணி தேவி சிலைக்கருகில் காணியொன்றில் மறைத்து க்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் கிளேமோர் குண்டு தாக்குதலில் சிக்கி அமைச்சர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் 8-1-2008 அன்று காலை 10.35 மணியளவில் இடம் பெற்றது..அமைச்சர் தசநாயக்கா புத்தளத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் நடந்துள்ளது. இறக்கும் போது அமைச்சரின் வயது 54 ஆகும். இச்சம்பவத்தில் மேலும் சிலர் பலியாகியுள்ளனர். அமைச்சர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்போது சிகிச்சை பலனின்றி மரனமானார். இச்சம்பவத்தில் வாகனங்கள் பலவற்றுக்கு சேதம் ஏற்பட்டது.
Thursday, November 19, 2009
நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியரினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு இளம் யுவதி படுகொலை
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் யுவதி ஒருவர் வைத்திய சாலையின் கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் 12-11-2007 அன்று மரணமானார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் கடமை புரிந்து வந்த சமிலா திசாநாயக்க (23 வயது) என்ற இளம் யுவதியே சம்பவத்தில் மரணமானவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ (32 வயது) என்பவர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சிகிச்சைக்காக வந்த யுவதியை குறித்த வைத்தியர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தை அடுத்து (13-11-2007 அன்று) வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மஹிந்த பிரபாத்சிங்க சம்பவ இடங்களை பார்வையிட்டதுடன் வைத்தியரின் அறை உட்பட பல இடங்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். வைத்தியரின் அறைக்கு முன்னாள் உள்ள அறையில் இருந்து யுவதியின் கைப்பை மற்றும் பாதணி உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டன.
பின்னர் நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.
இதேவேளை, உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தண்டணை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி 15-11-2007 அன்று நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. கொலை செய்யப்பட்ட யுவதி பணியாற்றிய தொழிற்சாலை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் பேரணியாகவும் வந்தனர்.
16-11-2007 அன்று யுவதியின் பூதவுடல் கட்டான பிரதேசத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்ட்டது. பின்னர் யுவதியின் சொந்த ஊரான மொனராகலைக்கு கொண்டு செல்லப்பட்டு 17—11-2007 அன்று இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
இதேவேளை, சந்தேக நபரான வைத்தியர் 16—11-2007 அன்று சிறைச்சாலையில் வைத்து தனது காற்சட்டை நாடாவை பயன்படுத்தி தற்கொலை செய்ய முயன்றார். நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்.இதற்கிடையில் நீர்கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் யுவதியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரெட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
19-11-2007 அன்று யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றிற்கு பொலிசாரால் சமர்பிக்கப்பட்டது.ராகமை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அதன் அறிக்கை சீல் வைக்கப்பட்டு நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது. அறிக்கையை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்குமாறு நீதிவான் பிரபாத் ரணசிங்க உத்தரவிட்டார்.
27-11-2007 அன்று நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது சந்தேக நபரான வைத்தியர் வைத்தியசாலையின் சிற்றூழியரால் அடையாளம் காட்டப்பட்டார்.
சந்தேக நபருக்கு உரிய தண்டணை வழங்குமாறு கோரி நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றிற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமும் அன்றைய தினம் இடம் பெற்றது.
இதேவேளை, 5-12-2007 அன்று இடம் பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது சாட்சியமளித்த வைத்தியசாலை சிற்றூழியரான திருமதி பியற்றிஸ் 12-11-2007 அன்று வைத்தியசாலையின் ஆறாவது மாடியில் சந்தேக நபரான வைத்தியர் கார்ட்போட் மட்டையொன்றை இழுத்து வருவதை (ஏழாவது மாடியில் படி ஏறும் வழியில் வைத்து )கண்டதாகவும் அதில் பெண் ஒருவர் படு்த்திருந்ததை கண்டதாகவும் தெரிவித்தார்.இது தொடர்பாக தாதி ஒருவரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். சந்தேக நபரான வைத்தியரை தொடரந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மஜிஸ்ரேட் உத்தரவிட்டார்.
பின்னர் இடம் பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது யுவதியின் மரணத்திற்கான காரணம் நீதிபதியால் தெரிவிக்கப்பட்டது.
மேலிருந்து கீழே விழுந்ததால் இடுப்பு எலும்பும் முள்ளந்தண்டு எலும்பும் முறிந்ததாலும் மண்டையோடு சிதைந்ததாலும் உள்ளே இரத்தம் கசிந்ததாலும் ஏற்பட்ட மரணம் என நீதிபதி தீர்ப்பளித்தார். யுவதியின் கழுத்தும் நெறிக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.
2008ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபரின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதுடன் சந்தேக நபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார். இவ்வாறு பலதடவைகள் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
15-09-2008 நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த சந்தேக நபரான வைத்தியர் 24-09-2008 அன்று இரண்டாவது தடவையாகவும் தற்கொலை செய்ய முயன்று ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். வைத்தியரின் மனைவி அக்காலப் பகுதியில் குழந்தை ஒன்றை பிரசவித்தமை குறிப்பிடத்தக்கது.
2009 ஆண்டு ஜுலை மாதம் 27 ஆம் திகதி இவ் வழக்கின் இரண்டாவது டி.என். ஏ. (மரபணு) பரிசோதணை அறிக்ககை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, இவ் வழக்கினை மேல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு மேலதிக மஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
பின்னர், இக் கொலை வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லபட்டது. மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , சந்தேக நபர் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா கொண்ட இரு நபர்களின் சரீரப்பிணையிலும் கடும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய நீதிவானால் உத்தரவிடப்பட்டார்.
விசாரணை தொடர்ந்து இடம் பெற்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வழக்கு இரண்டு ஆண்டு காலமாக (2009 ஆம் ஆண்டு வரையில்) இடம்பெற்று வருவதும், இரண்டாவது டி.என். ஏ. (மரபணு) பரிசோதணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுவதற்கு நீண்டகாலம் எடுத்தமையும் பல்வேறு தரப்பினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீதி காப்பாற்றப்படுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!

Subscribe to:
Posts (Atom)