நீர்கொழும்பு கடோல்கல கிராமத்தில் வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு கிராமவாசிகள் எதிர்ப்பு
தலாதூவ ,கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட கடோல்கல பிரதேசத்தில் களப்புப் பகுதிக்கு அருகில் உள்ள நிலப்பரப்பில் இருக்கும் கடற்தாவரங்களை அழித்து‚ மண் நிரப்பி அப்பகுதியில்
வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளமைக்கு எதிராக கடோல்கல கிராமவாசிகள் (September 5, 2007 )எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
சுனாமி ஏற்பட்டபோது கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்து நாசம் செய்யாமல் கடோல்கல பிரதேசவாசிகளின் உயிரையும்‚ உடைமைகளையும் காத்த கடற்தாவரங்களை அழித்து வீடமைப்பு
வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளமைக்கு கிராமவாசிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் 9 ஏக்கர் நிலப்பிரப்பில் பரந்து விரிந்துள்ள கடற்தாவரங்களை அழித்து அவ்விடத்தில் மண் நிரப்பி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக்
கொடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கே கிராமவாசிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி கடோல்கல கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தெரிவிக்கையில்‚
“சுனாமியின்போது கடோல்கல கிராம மக்களின் உயிர்களையும்‚ உடைமைகளையும் காத்தது இக்கடற்தாவரங்களேயாகும். இப்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள்
அமைத்துக் கொடுப்பதற்காக என்ற பெயரில் இங்குள்ள கடற்தாவரங்களை அழிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரகாலமாகிறது.இந்த வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்‚ அதற்கான காரணங்களை விளக்கியும் கடந்த வருடம் நவம்பர் மாதம் நாங்கள் ஜனாதிபதிக்கும்‚ கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சருக்கும்‚ இயற்கை வளங்கள்‚ சுற்றாடல் அமைச்சருக்கும் (பாட்லி சம்பிக ரணவக்க) கடிதம் அனுப்பியிருந்தோம். ஆயினும்‚ வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக கடற்தாவரங்களை “பெக்கோ” இயந்திரங்கள் மூலம் அழிக்கும் வேலைகள் தற்போது
ஆரம்பமாகியுள்ளன.
“இலங்கையில் உள்ள இருபத்திரண்டு (22) வகையான கடற்தாரங்களில் இருபது (20) வகையான கடற்தாவர வகைகள் இங்குள்ளன.“கடற்தாவரங்கள் அழிக்கப்பட்டு வீடுகள் கட்டுவதற்கு முயற்சிகள் நடப்பதால்‚ மீண்டும் ஒரு முறை சுனாமி வந்தால் இக்கிராமத்தவர்களை யாரும் காப்பாற்ற முடியாது. சுனாமியால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. ஆனால்‚ அதற்காக இன்னொரு அழிவுக்கு இடம்கொடுக்க முடியாது.” என்றார்.
பிரதேசத்தில் வசிக்கும் மீனவர் ஒருவர் இதுபற்றி தெரிவிக்கையில்‚
“1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய டென்ஸில் பெர்னாந்து அவர்களின் முயற்சியினால் அப்போது ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ளதாக இருந்த இப்பிரதேசத்தில 400 ஏக்கர் நிலம் சுத்தம் செய்யப்பட்டு மண் நிரப்பப்பட்டு குறைந்த வருமானமுடைய மக்களுக்கு காணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.ஆயினும்‚ அப்போது வகுத்த திட்டத்தின்படி அல்லாமல் தற்போது 800 ஏக்கர் வரையான பரப்பளவு காணி சுத்தம் செய்யப்பட்டு (கடற்தாவரங்கள் அழிக்கப்பட்டு) மண்
நிரப்பப்பட்டு வருமாணம் குறைந்த 1100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.பரம்பரையாக களப்பினில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களுக்கு
கடற்தாவரங்கள் கொண்ட சிறிய ஒரு பிரதேசமே தற்போது எஞ்சியுள்ளது.கடற்தாவரங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக மீன்கள்‚ இறால்கள்‚ நண்டுகளின் உற்பத்தி மிகவும் குறைந்து யுள்ளது. அவைகளின் இனப்பெருக்கத்திற்கு கடற்தாவரங்கள் மிக அவசியமானதாகும். அதனால்‚ களப்பினில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.“சுனாமியின்போது கிராம மக்களின் உயிரையும் சொத்துக்களையும் காத்தது
இக்கடற்தாவரங்களாகும். இதுபற்றி வெளியில் உள்ள பலருக்கும் தெரியாது.” என்றார்.
இப்பிரச்சினைக்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இக்கிராமவாசிகளின் வேண்டுகோளாகும்.
Thursday, November 19, 2009
மீனவர்களின் மாபெரும் எதிர்ப்புப் பேரணியும் மாநாடும்

உலக மீனவ தின வைபவத்தை நடத்தி விவசாய‚ மீனவ‚ தொழிலாளர்‚ தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பலப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்ப்புப் பேரணியும் கூட்டமும் நடைபெற்றது.
வடக்கு தவிர்த்து நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடக அடக்குமுறைக்கான இயக்கம் கலந்துகொண்டு ஊடக அடக்கு முறைக்கு எதிராக எதிர்ப்புக் கோஷம் எழுப்பியவாறு சென்றமை குறிப்பிடத்தக்கது. இதில் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து வந்த ஊடகவியலாளர்களும் பிரதேச ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
எதிர்ப்புப் பேரணியிலும் கூட்டத்திலும் நீர்கொழும்பு ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு (கடோல்கலே)‚ ஸ்ரீ லங்கர மீனவ பெண்கள் அமைப்பு (பிடிப்பனை)‚ நன்னீர் மீனவ கூட்டுறவுச் சங்கம் , பிரஜர சக்தி அபிவிருத்தி மன்றம்,சூரியகாந்தி சங்கம் (திருகோணமலை)‚ தென் மாகாண மீனவர் சங்கம் (மாத்தறை)‚ லூர்மாதர மீனவர் சங்கம் (தலவில)‚ கிராமிய பெண்கள் முன்னணி‚ பொதுமக்கள் திட்டவமைப்பு ஆணைக்குழு‚ சமூக நிதிக்கான பெண்கள் நடவடிக்கை‚ சவிஸ்திரி‚ தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்‚ மாவட்ட மீனவ பேரவை‚ உலக மீனவ மக்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளுடன் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பல்வேறு அமைப்புக்களையும் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இவர்கள் பல்வேறு சுலோகங்களையும் கைகளில் ஏந்தியிருந்ததோடு எதிர்ப்புக் கோஷங்ளையும் எழுப்பினர்.
“மீன்பிடி அமைச்சரே எங்களை ஏமாற்றாதீர்”‚ “எரிபொருளுக்கான வரியை குறை”‚ “மீன்பிடி என்ஜின் தடையை நீக்கு”‚ “மீன்பிடி உபகரண விலைகளை குறை”‚ “மீன்பிடித் தடையை நீக்கு”‚ “விலைவாசியை குறை”‚ “அத்தியாவசிய பொருட்களின் விலையை குறை”‚ “தோட்டத்தொழிலாளர்களினதும் அரசாங்க ஊழியர்களினதும் தனியார் துறையினரதும் சம்பளத்தை அதிகரிக்கவும்” ஆகிய சுலோகங்களை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
அத்துடன்‚ “சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தீர்வை வழங்கு”‚ “தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை விரைவில் ஆரம்பிக்கவும்” இலங்கை வாழ் மக்களி்ன் மந்த போஷனைக்கு விரைவில் தீர்வு வேண்டும்” “இலங்கையில் உழைக்கும் மக்களின் உரிமையை வென்றெடுப்போம்”‚ “யுத்தத்திற்கு‚ அடக்குமுறைக்கு‚ பட்டினிக்கு எதிராக ஒன்றிணைந்து
குரல் கொடுப்போம”‚ “நீர்கொழும்பு களப்பை நாசப்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்” ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
பேரணி பிற்பகல் 12.30 மணிக்கு நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் ஆரம்பித்து கொழும்பு வீதி‚ பிரதான வீதி‚ ராஜபக்ஷ வீதி வழியாக வந்து கடோல்கலே மைதானத்தை பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்தது.
அங்கு பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக மீனவ மக்கள் சம்மேளனத்தின் உள்நாட்டு‚ வெளிநாட்டு பிரதிநிதிகளும் பல்வேறு தொழில் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அங்கு பாடல்களும்‚ சிரேஷ்ட உரைகளும் இடம்பெற்றன.
தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையும் உலக மீனவ மக்கள் சம்மேளனமும் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் எதிர்ப்புப் பேரணியும்‚ எதிர்ப்புக் கூட்டமும் 28-11-2007 அன்று நீர்கொழும்பில் நடைபெற்றது. இதில்‚ ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் இடம் பெற்ற பாடல் ஒன்று
மரணங்கள் மலிந்த தேசம் 
எமது தேசம் மரணங்கள் மலிந்த தேசமாக ஆகிவிட்டது. மனித உயிர்களின் மதிப்பு தேய்பிறையாக தேய்ந்து கொண்டிருக்கும் போது விலைவாசி எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுக்கொண்டு இருக்கிறது.
இங்கு பல மனிதர்கள் மனித நேயத்தை‚ மனிதாபிமானத்தை மறந்து மிருகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நீர்கொழும்பு வெலிஹேன பிரதேசத்தில் 6-9-2007 நடந்த சம்பவம் ஒன்று மனிதன் மிருகமாக வாழ்ந்து கொண்டிருப்
பதற்கு சிறந்த உதாரணமாகும்.அந்தச் சம்பவம் என்ன?
தனது ஆசை நாயகியை கொலைசெய்து ஒருவருக்கும் தெரியாமல் வீட்டின் பின்னால் குழி தோண்டி புதைத்து வைத்த பாதகன் ஒருவன் அகப்பட்டுக் கொள்கிறான். பெண்ணின் சடலம்
புதைக்கப்பட்டு 5 தினங்களின் பின்னர் பொலிஸாரால் மீட்கப்படுகிறது.
இக்கோரச் சம்பவம் நீர்க்கொழும்பு வெலிஹேன
கிராமத்தின் அடிக்கண்டிய என்ற இடத்தில் இடம்பெற்றது. தனது முதல் மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு ஆசை
நாயகியுடன் வாழ்ந்துகொண்டிருந்த கொலைக்குற்றம் புரிந்த சந்தேக நபரான வனசிங்க ஆராய்ச்சிகே மனுவல் பிரான்ஸிஸ் (வயது-48) என்பவர்‚ பின்னர் ஆசை நாயகியான மஹாமாலிகே
கிரிஸ்டின் சியாமளியையும் (வயது-42) வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து ஆசை நாயகியின் மகள் ஒருவருடனும் தொடர்பு வைத்துக்கொள்கிறார்.
பின்னர் அந்த இளம் பெண்ணும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக தொழில்புரிய செல்கிறார்.
சந்தேகநபர் இவ்வாறு வாழ்ந்துவரும் வேளையில் முதல் மனைவி சுகயீனம் காரணமாக வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புகிறார். சிறிது நாட்களின் பின்னர் 1-09-2007 அன்று ஆசை நாயகியும் நாடு திரும்புகிறார்.
ஆசை நாயகியின் வரவைத் தொடர்ந்து முதல் மனைவி தனது மகனின் வீட்டுக்குச் சென்று வசிக்கிறார்.
இந்த நிலையில்‚ சந்தேகநபர் 6-09-2007 அன்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆசை நாயகியை கத்தியால் வெட்டிக் கொலைசெய்துவிட்டு வீட்டின் பின்னால் பெரிய குழி ஒன்றை தோண்டி புதைத்துவிட்டு‚ அதன் மீது வாழை மரம் ஒன்றையும் நாட்டி வை
க்கிறார்.
பின்னர் ஒன்றும் நடக்காததுபோல் இருந்துவிடுகிறார்.
அந்த பாதகனுக்கு தான் செய்த கொலை பற்றி வெளியில் தெரியவராது என்ற நம்பிக்கை.நீர்க்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதோடு‚ அடுத்த நாள் (11-09-2007) சடலமும் மீட்கப்படுகிறது.
ஆசை நாயகி வெளிநாட்டில் வைத்து வேறு ஒருவருடன் தொடர்புகொண்டு‚ அவருடன் இலங்கை வந்ததை அறிந்தே தாம் அவரை கொலைசெய்தார் என சந்தேக நபர் பொலிஸாரிடம்
தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் முதல் மனைவிக்கு நான்கு பிள்ளைகளும்‚ ஆசை நாயகிக்கு அவரின் முதல் கணவர் மூலம் மூன்று பிள்ளைகளும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.சுடலம் மீட்கப்பட்டபோது சடலத்தின் முகம் இனங்காண முடியாதவாறு சேதமடைந்து காணப்பட்டது. வெலிஹேன‚ அடிக்கண்டிய பிரதேசம் அன்று முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.மனித உயிர் இவ்வளவு மலிவானதா?
இது மரணங்கள் மலிந்த தேசமா?
எமது தேசம் மரணங்கள் மலிந்த தேசமாக ஆகிவிட்டது. மனித உயிர்களின் மதிப்பு தேய்பிறையாக தேய்ந்து கொண்டிருக்கும் போது விலைவாசி எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுக்கொண்டு இருக்கிறது.
இங்கு பல மனிதர்கள் மனித நேயத்தை‚ மனிதாபிமானத்தை மறந்து மிருகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நீர்கொழும்பு வெலிஹேன பிரதேசத்தில் 6-9-2007 நடந்த சம்பவம் ஒன்று மனிதன் மிருகமாக வாழ்ந்து கொண்டிருப்
தனது ஆசை நாயகியை கொலைசெய்து ஒருவருக்கும் தெரியாமல் வீட்டின் பின்னால் குழி தோண்டி புதைத்து வைத்த பாதகன் ஒருவன் அகப்பட்டுக் கொள்கிறான். பெண்ணின் சடலம்
புதைக்கப்பட்டு 5 தினங்களின் பின்னர் பொலிஸாரால் மீட்கப்படுகிறது.
இக்கோரச் சம்பவம் நீர்க்கொழும்பு வெலிஹேன
நாயகியுடன் வாழ்ந்துகொண்டிருந்த கொலைக்குற்றம் புரிந்த சந்தேக நபரான வனசிங்க ஆராய்ச்சிகே மனுவல் பிரான்ஸிஸ் (வயது-48) என்பவர்‚ பின்னர் ஆசை நாயகியான மஹாமாலிகே
கிரிஸ்டின் சியாமளியையும் (வயது-42) வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து ஆசை நாயகியின் மகள் ஒருவருடனும் தொடர்பு வைத்துக்கொள்கிறார்.
சந்தேகநபர் இவ்வாறு வாழ்ந்துவரும் வேளையில் முதல் மனைவி சுகயீனம் காரணமாக வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புகிறார். சிறிது நாட்களின் பின்னர் 1-09-2007 அன்று ஆசை நாயகியும் நாடு திரும்புகிறார்.
ஆசை நாயகியின் வரவைத் தொடர்ந்து முதல் மனைவி தனது மகனின் வீட்டுக்குச் சென்று வசிக்கிறார்.
இந்த நிலையில்‚ சந்தேகநபர் 6-09-2007 அன்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆசை நாயகியை கத்தியால் வெட்டிக் கொலைசெய்துவிட்டு வீட்டின் பின்னால் பெரிய குழி ஒன்றை தோண்டி புதைத்துவிட்டு‚ அதன் மீது வாழை மரம் ஒன்றையும் நாட்டி வை
பின்னர் ஒன்றும் நடக்காததுபோல் இருந்துவிடுகிறார்.
அந்த பாதகனுக்கு தான் செய்த கொலை பற்றி வெளியில் தெரியவராது என்ற நம்பிக்கை.நீர்க்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதோடு‚ அடுத்த நாள் (11-09-2007) சடலமும் மீட்கப்படுகிறது.
ஆசை நாயகி வெளிநாட்டில் வைத்து வேறு ஒருவருடன் தொடர்புகொண்டு‚ அவருடன் இலங்கை வந்ததை அறிந்தே தாம் அவரை கொலைசெய்தார் என சந்தேக நபர் பொலிஸாரிடம்
சந்தேக நபரின் முதல் மனைவிக்கு நான்கு பிள்ளைகளும்‚ ஆசை நாயகிக்கு அவரின் முதல் கணவர் மூலம் மூன்று பிள்ளைகளும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.சுடலம் மீட்கப்பட்டபோது சடலத்தின் முகம் இனங்காண முடியாதவாறு சேதமடைந்து காணப்பட்டது. வெலிஹேன‚ அடிக்கண்டிய பிரதேசம் அன்று முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.மனித உயிர் இவ்வளவு மலிவானதா?
இது மரணங்கள் மலிந்த தேசமா?
Sunday, November 1, 2009
நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரினால் வறிய மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள்

நீர்கொழும்பு மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவரினால் (ஐக்கிய தேசியக் கட்சி) வறிய மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்களும் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வு 30-12-2007 அன்று நீர்கொழும்பு தலாதூவ பிரதேசத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடாவும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா கலந்து கொண்டார்.
அங்கு 250 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான பிரதீப் பீரிஸ், கெலிசன் ஜயகொடி உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

போருதொட்ட பிரதேசத்தில் கடற்கரைப் பூங்காவும் கரப்பந்தாட்ட மைதானமும்

நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தில் முப்பது இலட்சம் ரூபா செலவில் கடற்கரைப் பூங்காவும் கரப்பந்தாட்ட மைதானமும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 20-1-2008 அன்று போருதொட்ட கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது.
சிவில் விமான சேவைகள் அமைச்சர் சரத்குமார குணரட்ன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேயர் நிமல்லான்ஸா, பிரதி மேயர் சேபால மொரவக்க , மாநகர சபை உறுப்பினர் பரீஸ் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் பிராந்தியக் கண்காட்சி நீர்கொழும்பில்

இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் பிராந்தியக் கண்காட்சி 5-1-2008 முதல் 7-1-2008 வரை நீர்கொழும்பு மாநகர சபை வளவில் நடை பெற்றது.
சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன கண்காட்சியை திறந்து வைத்தார்.
கண்காட்சி திறந்து வைக்கப்படுவதற்கு முன்னர் மாநகர சபை மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் தலைவர் ஜயந்த பெரேரா, பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன, கட்டிடக் கலைஞர் பிரசன்ன சில்வா ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் நிமல் லான்ஸா, கண்காட்சியின் ஒழுங்கமைப்புக் குழு இணைத் தலைவர்களான கட்டிடக் கலைஞர்களான பந்துல வெலிகடாராச்சி, சுரன்ஜன் ரணசிங்க உட்பட நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பல நிறுவனங்கள் இங்கு கூடங்களை அமைத்திருந்தன. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் நீர்கொழும்பில்
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் 22-12-2007 அன்று நீர்கொழும்பு குரணையில் உள்ள வை. எம். சி. ஏ. சர்வதேச ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசியத் தலைவர் ஜகத் அபேசிங்க , தேசிய சிரேஷ்ட உப தலைவர் பாரத ஜொனிக் ஹேவ , பணிப்பாளர் நாயகம் எருவில் நாணயக்கார, தேசிய செயலாளர் நிமால் குமார் உட்பட மேலும் பல அதிகாரிகளும் , வடக்கு-கிழக்கு உட்பட சகல மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்த 25 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இம்முறை சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டத்தை கம்பஹா மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)