Thursday, November 19, 2009

மரணங்கள் மலிந்த தேசம்

எமது தேசம் மரணங்கள் மலிந்த தேசமாக ஆகிவிட்டது. மனித உயிர்களின் மதிப்பு தேய்பிறையாக தேய்ந்து கொண்டிருக்கும் போது விலைவாசி எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுக்கொண்டு இருக்கிறது.
இங்கு பல மனிதர்கள் மனித நேயத்தை‚ மனிதாபிமானத்தை மறந்து மிருகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நீர்கொழும்பு வெலிஹேன பிரதேசத்தில் 6-9-2007 நடந்த சம்பவம் ஒன்று மனிதன் மிருகமாக வாழ்ந்து கொண்டிருப்
பதற்கு சிறந்த உதாரணமாகும்.அந்தச் சம்பவம் என்ன?
தனது ஆசை நாயகியை கொலைசெய்து ஒருவருக்கும் தெரியாமல் வீட்டின் பின்னால் குழி தோண்டி புதைத்து வைத்த பாதகன் ஒருவன் அகப்பட்டுக் கொள்கிறான். பெண்ணின் சடலம்
புதைக்கப்பட்டு 5 தினங்களின் பின்னர் பொலிஸாரால் மீட்கப்படுகிறது.

இக்கோரச் சம்பவம் நீர்க்கொழும்பு வெலிஹேன
கிராமத்தின் அடிக்கண்டிய என்ற இடத்தில் இடம்பெற்றது. தனது முதல் மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு ஆசை
நாயகியுடன் வாழ்ந்துகொண்டிருந்த கொலைக்குற்றம் புரிந்த சந்தேக நபரான வனசிங்க ஆராய்ச்சிகே மனுவல் பிரான்ஸிஸ் (வயது-48) என்பவர்‚ பின்னர் ஆசை நாயகியான மஹாமாலிகே
கிரிஸ்டின் சியாமளியையும் (வயது-42) வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து ஆசை நாயகியின் மகள் ஒருவருடனும் தொடர்பு வைத்துக்கொள்கிறார்.
பின்னர் அந்த இளம் பெண்ணும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக தொழில்புரிய செல்கிறார்.

சந்தேகநபர் இவ்வாறு வாழ்ந்துவரும் வேளையில் முதல் மனைவி சுகயீனம் காரணமாக வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புகிறார். சிறிது நாட்களின் பின்னர் 1-09-2007 அன்று ஆசை நாயகியும் நாடு திரும்புகிறார்.

ஆசை நாயகியின் வரவைத் தொடர்ந்து முதல் மனைவி தனது மகனின் வீட்டுக்குச் சென்று வசிக்கிறார்.
இந்த நிலையில்‚ சந்தேகநபர் 6-09-2007 அன்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆசை நாயகியை கத்தியால் வெட்டிக் கொலைசெய்துவிட்டு வீட்டின் பின்னால் பெரிய குழி ஒன்றை தோண்டி புதைத்துவிட்டு‚ அதன் மீது வாழை மரம் ஒன்றையும் நாட்டி வை
க்கிறார்.
பின்னர் ஒன்றும் நடக்காததுபோல் இருந்துவிடுகிறார்.
அந்த பாதகனுக்கு தான் செய்த கொலை பற்றி வெளியில் தெரியவராது என்ற நம்பிக்கை.நீர்க்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதோடு‚ அடுத்த நாள் (11-09-2007) சடலமும் மீட்கப்படுகிறது.
ஆசை நாயகி வெளிநாட்டில் வைத்து வேறு ஒருவருடன் தொடர்புகொண்டு‚ அவருடன் இலங்கை வந்ததை அறிந்தே தாம் அவரை கொலைசெய்தார் என சந்தேக நபர் பொலிஸாரிடம்
தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் முதல் மனைவிக்கு நான்கு பிள்ளைகளும்‚ ஆசை நாயகிக்கு அவரின் முதல் கணவர் மூலம் மூன்று பிள்ளைகளும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.சுடலம் மீட்கப்பட்டபோது சடலத்தின் முகம் இனங்காண முடியாதவாறு சேதமடைந்து காணப்பட்டது. வெலிஹேன‚ அடிக்கண்டிய பிரதேசம் அன்று முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.மனித உயிர் இவ்வளவு மலிவானதா?



இது மரணங்கள் மலிந்த தேசமா?

Sunday, November 1, 2009

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரினால் வறிய மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள்




நீர்கொழும்பு மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவரினால் (ஐக்கிய தேசியக் கட்சி) வறிய மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்களும் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வு 30-12-2007 அன்று நீர்கொழும்பு தலாதூவ பிரதேசத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடாவும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா கலந்து கொண்டார்.
அங்கு 250 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான பிரதீப் பீரிஸ், கெலிசன் ஜயகொடி உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
போருதொட்ட பிரதேசத்தில் கடற்கரைப் பூங்காவும் கரப்பந்தாட்ட மைதானமும் நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தில் முப்பது இலட்சம் ரூபா செலவில் கடற்கரைப் பூங்காவும் கரப்பந்தாட்ட மைதானமும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 20-1-2008 அன்று போருதொட்ட கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது.
சிவில் விமான சேவைகள் அமைச்சர் சரத்குமார குணரட்ன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேயர் நிமல்லான்ஸா, பிரதி மேயர் சேபால மொரவக்க , மாநகர சபை உறுப்பினர் பரீஸ் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இதில் கலந்து கொண்டனர்.
இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் பிராந்தியக் கண்காட்சி நீர்கொழும்பில்



இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் பிராந்தியக் கண்காட்சி 5-1-2008 முதல் 7-1-2008 வரை நீர்கொழும்பு மாநகர சபை வளவில் நடை பெற்றது.
சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன கண்காட்சியை திறந்து வைத்தார்.
கண்காட்சி திறந்து வைக்கப்படுவதற்கு முன்னர் மாநகர சபை மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் தலைவர் ஜயந்த பெரேரா, பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன, கட்டிடக் கலைஞர் பிரசன்ன சில்வா ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் நிமல் லான்ஸா, கண்காட்சியின் ஒழுங்கமைப்புக் குழு இணைத் தலைவர்களான கட்டிடக் கலைஞர்களான பந்துல வெலிகடாராச்சி, சுரன்ஜன் ரணசிங்க உட்பட நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பல நிறுவனங்கள் இங்கு கூடங்களை அமைத்திருந்தன. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் நீர்கொழும்பில்




இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் 22-12-2007 அன்று நீர்கொழும்பு குரணையில் உள்ள வை. எம். சி. ஏ. சர்வதேச ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசியத் தலைவர் ஜகத் அபேசிங்க , தேசிய சிரேஷ்ட உப தலைவர் பாரத ஜொனிக் ஹேவ , பணிப்பாளர் நாயகம் எருவில் நாணயக்கார, தேசிய செயலாளர் நிமால் குமார் உட்பட மேலும் பல அதிகாரிகளும் , வடக்கு-கிழக்கு உட்பட சகல மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்த 25
பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இம்முறை சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டத்தை கம்பஹா மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







Friday, October 23, 2009

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு
எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில்
ஆர்ப்பாட்டம்

“சண்டே லீடர் ” பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் பிரபல ஊடக வியலாளருமான லசந்த விக்ரமதுங்க இனந்தெரியாத ஆயுததாரிகளால் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் சில வருமாறு:-













“சண்டே லீடர் ” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் படுகொலை


“சண்டே லீடர் ” பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் பிரபல ஊடக வியலாளருமான லசந்த விக்ரமதுங்க இனந்தெரியாத ஆயுததாரிகளால் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். லசந்த விக்ரமதுங்கவின் இறுதி சடங்கு நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்கள் சில வருமாறு:-