அனோமா பொன்சேகாவின் பிறந்தநாள்
ஆறாவது நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா 12-1-2010 அன்று நீரகொழும்பு வருகை தந்து பெண்கள் அமைப்பினைரை சந்தித்தார். இந்நிகழ்வு கியூபிட் கார்ட்ன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பாரியார் ஸானாஸ் ஹக்கீமும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். இந்நிகழ்வின் போது அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் அனோமா பொன்சேகாவுக்காக "கேக் "ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனோமா பொன்சேகா "கேக்"வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோகாட்சி இது.
Saturday, January 30, 2010
Thursday, January 28, 2010
இலங்கையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல்

27-1-2010 அன்று மாலை தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி 60 இலட்சத்து15 ஆயிரத்து 934 வாக்குகள் (6,015,934) பெற்று 57.88சதவீத) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வெற்றிபெற்றார். எதிரணிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல்சரத் பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகள் (4,173,185) பெற்று (40.15 வீதம்) இரண்டாமிடம் பெற்றார்.
இத்தேர்தலில் 18,42,749 மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் மக்களின் கருத்துக்களுக்கும் அவர்களின் விருப்பங்களுக்கும் உட்பபட்டதாக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல்சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரங்கள் பல நீர்கொழும்பிலும் இடம்பெற்றன. அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
ஜெனரல் சாத் பொன்சோகாவின் பிரசாரக் கூட்டம்-கடோல்கலே மைதானம்




திருமதி அனோமா பொன்சேகா பெண்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வில்-உடன் இருப்பதுதிருமதி ஸானாஸ் ஹக்கீம்
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
Subscribe to:
Posts (Atom)