ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
Tuesday, May 24, 2011
Saturday, May 14, 2011
நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரைப் பூங்காவில் 12-5-2011 இரவு பாரிய
திமிங்கிலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.இறந்த நிலையில் காணப்படும் இத் திமிங்கிலம் இரவு கரையொதுங்கும் போது உயிருடன் இருந்த்தாக பிரதேச
மக்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தை கேள்விப்பட்டதும் பொதுமக்கள் அங்கு ஆயிரக் கணக்கில் படை எடுத்தனர்.
Tuesday, December 14, 2010
நீர்கொழும்பு அல்பலாஹ் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹானுக்கு மரண அச்சுறுத்தல்
நீர்கொழும்பு அல்பலாஹ் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹானுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும்,பிரதி அதிபரை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரியும் மகஜர்களில் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சில நபர்களால் கடிதம் மூலமாக தனக்கு விடுக்கப்பட்டுள்ள விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாகவும், இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரி சிலரால் பெறப்பட்டுள்ள மகஜர் தொடர்பாகவும் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.அத்துடன் நீர்கொழும்பு வலய கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.
அதிபர் சேவை வகுப்பு 2-11 ற்கான எழுத்துப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்று (நீர்கொழும்பு வலயத்தில் முதலிடம்) சித்திடைந்துள்ள இவர், முன்னாள் ஆசிரிய ஆலோசகரும் கவிஞரும் பிரபல ஊடகவியலாளருமாவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் மூன்று வருடகாலம் நிகழ்சித் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார். அத்துடன் புத்தகங்கள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார்
அல்பலாஹ் மகாவித்தியாலயத்தில் இவர் பிரதி அதிபராக கடமையை பொறுப்பேற்றது முதல் நிருவாக ரீதியிலும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையிலும்,பாடசாலையை ஊடகங்கள் வாயிலாக பிரபல்யப் படுத்துவதிலும் தனது முழுப்பங்களிப்பையும் வழங்கி பாடசாலையை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றமையை பொறுக்காத சிலரே,இவர் சார்ந்த இஸ்லாமிய ஜமாத் பிரிவை முன்னிலைப்படுத்தி இவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் இடமாற்றலாகி செல்லுமாறு வற்புறுத்தியும்,மகஜர்களில் கையொப்பமும் பெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.பாடசாலையின் பெயரில் alfalahmv.blogspot.com என்றபெயரில் ஜனாப் ஷாஜஹான் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்மையும் மாணவர்களின் ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவர மாணவர்களை உற்சாகப்படுத்துயுள்மையும் கடந்த சில மாத காலத்தில் நிகழ்ந்தவையாகும்
இப்பாடசாலையில் கடந்த ஒன்பது வருட காலப் பகுதியில் ஆறு அதிபர்கள் பல்வேறு அழுத்தங்களின் காரணமாக இடமாற்றலாகியும்,இடமாற்றல் செய்யப்பட்டும் பொறுப்பிலிருந்து விலகியும் உள்ளனர்.இவர்களில் ஒருவர் கல்வி நிருவாக சேவை அதிகாரியாவார். மூவர் அதிபர் சேவையை சேர்ந்தவர்களாவர்.இருவர் ஆசிரியர் சேவையை சேர்ந்தவர்களாவர்.இவர்களில் எவரும் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹான் பின்பற்றும் இஸ்லாமிய ஜமாத்தை சேராதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,10-12-2010 அன்று போருதொட்ட ஜும்மா பள்ளிவாசல்களில் பிரதி அதிபரை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரி மகஜர்களில் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளதன் பின்னணியில் பெரியமுல்லை பிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இருவர் இருப்பதாகவும் இவ்விவகாரத்தை அவர்கள் தமது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்துவதாகவும் பிரதேசமக்கள் குறிப்பிடுகின்றனர்.
மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள கடிதத்தின் பின்னணியில்பாடசாலையின் ஆசிரியர்கள் சிலரும் பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிலரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலரும் இருப்பதாகவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை,பாடசாலையைவிட்டு இடமாற்றலாகிச் செல்ல வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் பிரதி அதிபர் ஷாஜஹானுக்கு நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை விடுத்து வருவதுடன் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
.
Friday, May 28, 2010
ஆங்சான் சூகி உட்பட சகல அரசியல் கைதிளையும் விடுலை செய்!
மியன்மார் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
மியன்மாரின் எதிர் கட்சித் தலைவி ஆங்சான் சூகி உட்பட சகல அரசியல் கைதிளையும் விடுலை செய்யுமாறு வற்புறுத்தி கொழும்பு-7 இல் அமைந்துள்ள மியன்மார் தூதரகம் முன்பாக 26-5-2010 அன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனை இரன்டாம் உலக நண்பாகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஐக்கிய சோஷலிச கட்சித் தலைவர் சிறிதுங்க ஐயசூறிய ,மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள ,ஊடகவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மியன்மாரில் தேர்தல் நடைபெற்று 20 வருடங்கள் நிறைவடைவதையிட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது
To release aung san suki and political jailers, ” friends of 2nd world” organization has prepared a picketing and it has held forward the Burma embassy at Colombo-7 on 26 may 2010.
Saturday, May 1, 2010
நீர்கொழும்பு கட்டுவையில் முச்சக்கர வண்டி மீது ரயில் மோதியதில்இருவர் பலி




நீர்கொழும்பு கட்டுவையில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற முச்சக்கர வண்டி மீது ரயில் மோதியதில் இளம்பெண் ஒருவர் (29 வயது) சம்பவ இடத்தில் மரணமானதுடன் முச்சக்கர வண்டி சாரதி குருணாகல் வைத்திய சாலையில் பின்னர் மரணமானார். இச் சம்பவம் 30-4-2010 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.
வடபகுதியை சேர்ந்த இளம் பெண்ணே சம்பவத்தில் மரணமானவராவார் இவர் திருமணம் முடித்து 9 மாதமே ஆவதாகவும் நீர்கொழும்பு கட்டுவையில் கணவர் மற்றும் அம்மாவுடன் வசித்துவருவதாகவும், அம்மாவுடன் முச்சக்கர வண்டியில் செல்லும்பதே விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.
சம்பவத்தில் இறந்த முச்சக்கர வண்டி சாரதி தளுபத்தை பிதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.விபத்து சம்பவத்தைதொடர்ந்து பிதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆயத்தமாயினர். பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தினர்.
இந்த பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் பலர் மரணமாகியுள்மை குறிப்பிடத்தக்கது.
Sunday, April 11, 2010



நீர்கொழுபு தேர்தல்தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன 46040 விருப்பு வாக்குகளும் , ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஜயலத் ஜயவர்தன 58302 விருப்பு வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் 23122 விருப்பு வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
இதேவேளை,கட்டனை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட விஷேட வைத்திய நிபுணர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே 186140 விருப்பு வாக்குகள் பெற்று கம்பஹா மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
