Saturday, June 4, 2011


சுதந்திர வர்த்தக வலய ஊழியர் ரொசேன் சானகவின் இறுதிச் சடங்கு

தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மரணமான சுதந்திர வர்த்தக வலய ஊழியர் ரொசேன் சானகவின் (22வயது) இறுதிச் சடங்கு நேற்று சனிக்கிமை மாலை4 மணியளவில் கல்லொழுவை ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்று, தேவாலயம் அருகில் உள்ள மயானத்தில் தேகம் தகனம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் தொழிற்சாலை ஊழியர்கள் ,பொது மக்கள் தொழிற் சங்கத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.






Thursday, June 2, 2011

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஊழியர் ஒருவர் மரணமானதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஊழியர் ஒருவர் மரணமானதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க 18 ஆம் கட்டை பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்த்தில் பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு சிவில் அமைப்புக்கள் கலந்துகொண்டன.







Wednesday, June 1, 2011


வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்ளை பாரவையிட்டஅரசியல் கட்சித் தலைவர்கள்

தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களை 31-5-2011 ஆம் திகதியும் இன்றும் ( 1-6-2011 ) அரசியல் கட்சி தலைர்கள் பலர் வைத்தியசாலைக்கு சென்று பாரவையிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி ,ஜே.வி.பி. தலைவர்களே இவ்வாறு பார்வையிட்டவர்களாவர்.







கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 250

பேர் வைத்தியசாலையில்





தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30-5-2011 அன்று பிற்பகல் 1 மணிமுதல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்குமிடையில் மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்ளை களைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகையை பயன்படுத்தினர். 250ஊழியர்கள் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.18 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

Tuesday, May 24, 2011

ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்





தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 8 மணிமுதல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்குமிடையில் மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை பயன்படுத்தினர். பொலிசார் அவர்களை களைப்பதற்கு கண்ணீர் புகையை பயன்படுத்தினர்

Saturday, May 14, 2011


வெசாக் தினம்

புத்த ஜயந்தியை முன்னிட்டு இம் முறை வெசாக் தினம் இலங்கையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.பாரிய பந்தல்களும் ,வெசாக் கூடுகளும் தானசாலைகளும் நாட்டின் பல பாகங்களிலும் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன. கொழும்பு கிறேன்டபாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை படத்தில் காணலாம்.
நீர்கொழும்பு கடற்ரையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்

நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரைப் பூங்காவில் 12-5-2011 இரவு பாரிய

திமிங்கிலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.இறந்த நிலையில் காணப்படும் இத் திமிங்கிலம் இரவு கரையொதுங்கும் போது உயிருடன் இருந்த்தாக பிரதேச

மக்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தை கேள்விப்பட்டதும் பொதுமக்கள் அங்கு ஆயிரக் கணக்கில் படை எடுத்தனர்.