Sunday, April 11, 2010

பாராளுமன்றத்திற்கு நீர்கொழும்பு தேர்தல் தொகுதியிலிருந்து இருவர் தெரிவு



இலங்கையில் நடந்து முடிந்த ஏழாவது பாராளுமன்ற தேர்தலில்(8-4-2010) நீர்கொழுபு தேர்தல் தொகுதியிலிருந்து போட்டியிட்ட இருவேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.அத்துடன் நீரகொழும்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2089மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 26076 வாக்குகளும் ஐக்கிய தேசிய முன்னணி 23987 வாக்குகளும்,ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 3463 வாக்குகளும் பெற்றுள்ளன.

நீர்கொழுபு தேர்தல்தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன 46040 விருப்பு வாக்குகளும் , ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஜயலத் ஜயவர்தன 58302 விருப்பு வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் 23122 விருப்பு வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
இதேவேளை,கட்டனை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட விஷேட வைத்திய நிபுணர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே 186140 விருப்பு வாக்குகள் பெற்று கம்பஹா மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Monday, April 5, 2010

மக்கள் மறுமலர்ச்சி முன்னணி நீர்கொழும்பில் நடத்திய பிரசாரக் கூட்டம்





ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் யாழ் மாவட்ட பொது தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அசோக், உதயன் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் மறுமலர்ச்சி முன்னணி 4-4-2010 அன்று நீர்கொழும்பு பெரிய முல்லையில் பிரசாரக் கூட்மொன்றை நடத்தியது. மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் கம்பஹா மாவட்ட தலைவர் எம்.எம்.சபூர் தலைமையில் நடத்தப்பட்ட இந் நிகழ்வில் மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் உப தலைவர் மௌலவி சுபியான் உட்பட பல முக்கியஸ்த்தர்கள் உரையாற்றினார்கள்.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களுக்காக இப்பிரசாரக் கூட்டம் நடத்தப்பட்டது.

கொச்சிக்டை -இராஜ மாதங்கி அம்பாள் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு நிகழ்வு

40 இலட்சம் ரூபா உத்தேச செலவில் அமைக்கப்படவுள்ள நீர்கொழும்பு –கொச்சிக்டை-மாஹிம்வீதியில் அமைந்துள்ள இராஜ மாதங்கி அம்பாள் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு நிகழ்வு 27-3-2010 அன்று இடம் பெற்றது.இந் நிகழ்வில் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன, மேயர் ஹேர்மன் குரேரா,மாநகர சபை உறுப்பினர்களான சகாவுல்லாஹ்,சுனில் சில்வா உட்பட பலர் கலந்து கொண்டனர்.